ஜோதிட சூட்சுமங்கள் : (ஜோதிட பாடம் : 016 )

இந்து லக்கினம் பற்றி நாம் சென்ற பாடத்தில் , கூறியிருந்ததற்கு - வந்திருக்கும் மின்னஞ்சல்கள் ஏராளம்.. அவர்களில் நிறைய பேருக்கு சந்தேகங்கள். அதைப் பற்றிய சந்தேகங்கள் அடங்கிய கேள்விகளுக்கு - தனியாக ஒரு பதிவே எழுதி விடலாம் என்று நினைக்கிறேன். அனைவருக்கும், உபயோகமாக இருக்கும் என்பதால். ... (ஆனால் , அது அடுத்த பதிவில்)...  உங்களுக்கு , ஏதாவது இந்து லக்கினம் பற்றி சந்தேகம் இருந்தால், இந்த பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் , அல்லது இதுவரை உள்ள பாடங்களில் ஏதாவது சந்தேகம் இருந்தால்...  .. உங்கள் கேள்விகளை அனுப்பலாம்..  

இதுவரை நடத்தப்பட்ட பாடங்களில் - உள்ள சந்தேகங்களுக்கு - அடுத்த அடுத்த பதிவுகளில்  , முடிந்த அளவுக்கு - தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன்...

அனேகமாக இந்த பாட முடிவிலும், அடுத்த நமது பாடங்களின் - கேள்வி - பதில்களிலும் - நாம் ஓரளவுக்கு விஷயங்களை தெரிந்து கொண்டு இருப்போம்... இனி வர விருக்கும் பாடங்களில் , நாம் ஜாதகம் பார்த்து பலன் சொல்வது எப்படி என்று பார்க்க விருக்கிறோம்.. நான் இல்லை, நீங்கதான் சொல்லப் போறீங்க... 

நாம பாடம் நடத்துற முறையே அப்படித் தான்.. முடியும் ... உங்களால் முடியும் என நம்புகிறேன்...

சரி, இந்த வார பாடம் பார்க்கலாம்.

சில விஷயங்களுக்கு - காரண காரியம் தெரிவது இல்லை. அந்த கால ரிஷிகளால் ,  வகுத்து வைக்கப் பட்டுள்ள ஜோதிட சாஸ்திர விதிகள் அதைப் போலே தான். நிறைய விதிகளுக்கு - கொஞ்சம் போலவாவது காரணம் புரியும். ஒரு சில விதிகளுக்கு,.... !? சுத்தம்.. ஏன் ? எதுக்குனே புரிபடாது... அந்த மாதிரி - இரண்டு விஷயங்களை , பலரது ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில்  , தெளிவாக அவை பொருந்தி இருப்பதால் , ஆச்சரியப்பட்டு , அந்த விஷயங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.


காரகோ பாவ நாஸ்தி

நாம் ஏற்கனவே - பன்னிரண்டு வீடுகளைப் பற்றி , பாடம் பார்த்தோமே, ...அந்த ,   அந்த வீடுகளுக்கு காரகத்துவம் பெரும் கிரகங்களைப் பற்றி கூறி இருந்தேன்... ஞாபகம் இருக்கிறதா?

உதாரணத்திற்கு - ஏழாம் வீடு - களத்திர ஸ்தானம் - காரகம் பெறுவது - சுக்கிரன். ஐந்தாம் வீடு - குழந்தைகள் ஸ்தானம் - காரகம் பெறுவது  - குரு .

கரெக்டா ?  இந்த ஏழு கிரகங்களுமே, தனது  காரகம்   பெறும் இடங்களில் நின்றால் - சொதப்பி விடுகிறார்கள். அவர்கள் வேலை பார்ப்பதே இல்லை. 
தனியாக நின்றால் , வெகு நிச்சயமாக சொதப்பல். மற்ற கிரகங்களுடன் இணைந்து இருப்பது - பரவா இல்லை.

அதாவது - எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழில் - சுக்கிரன் தனித்து இருந்தால் , அவர்களுக்கு திருமண விஷயம் , அவ்வளவு எளிதாக இருப்பது இல்லை. நிறைய பேருக்கு திருமணமே நடப்பது இல்லை. அல்லது வெகு தாமத திருமணம்... முறைப்படி திருமணம் செய்து குடித்தனம் நடத்த முடியாத நிலை இப்படி..தவறி, விதி விலக்காய்  நடந்தாலும் - கல்யாணம் பண்ணியும் பிரயோஜனம் இல்லாத நிலைமை.  இப்படி....

அதைப் போலவே ,  ஐந்தாம் வீட்டில் - குரு தனித்து நின்றால் - அவர்களுக்கு - குழந்தை பாக்கியம் இருப்பது இல்லை. ஆகா , பிரமாதம், ஐந்தில் குரு - நல்லா பக்காவா - திரிகோண ஸ்தானத்தில் இருக்கிறார் என அவசரப் பட்டு விடாதீர்கள்.. 

இதற்க்கு பெயர் தான் காரகோ பாவ நாஸ்தி .... 

இதைக் கூட நிறைய ஜோதிடர்கள் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.. ஆனால் , நாம் அடுத்து பார்க்க விருக்கும் விஷயம் - நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை என்பது என் அனுபவம்...

எந்த ஒரு விஷயமும் தெரிஞ்சுக்கிட ரெண்டு வகை இருக்கு. -- ஒன்னு உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற குரு - பக்காவா , வெளிப்படையா சொல்லிக் கொடுக்கிறவரா இருக்கணும். ... இல்லையா , உங்களுக்கு இயல்பா இருக்கிற ஆர்வம் , உங்க தேடுதல் ... உங்களுக்கு நிறைய விஷய ஞானத்தைக்  கொடுக்கும்.

சரி, இப்போ நாம பார்க்க விருப்பது  - கேந்திராதிபத்திய தோஷம்  பற்றி :

சுப கிரகங்கள் - கேந்திர அதிபதிகளாக இருந்து  , கேந்திரங்களிலேயே நிற்க - அவராலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்கிறது விதி.. இது எல்லா கிரகங்களுக்கும் இல்லை. முழுக்க , முழுக்க சுப கிரகங்களுக்கு மட்டுமே.

இயல்பிலேயே - அசுப கிரகங்களான - செவ்வாய் , சனி, சூரியன் , தேய்பிறை சந்திரன், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் அசுப கிரகமான புதன் , ராகு , கேது  - ஆகியோர் கேந்திரங்களில் நின்றால் - தோஷமில்லை.

எனவே , கேந்திராதிபத்திய தோஷம் பெறும் கிரகங்கள் - குரு, சுக்கிரன் , வளர்பிறை சந்திரன், தனியாக நிற்கும் புதன்.
இவர்கள் , வேறு கிரகங்களுடன் இணைந்து - கேந்திரத்தில் இருந்தால் , பரவா இல்லை. தனியே நிற்க கூடாது.

 வெறுமனே ஜாதகம் பார்த்து விட்டு - ஆஹா , நல்ல சுப கிரகம்  - முழு  பலத்துடன் கேந்திர ஸ்தானத்தில் நிற்கிறது.. அமோகமாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள்.. சரியா ?

தெளிவாக புரிய வில்லை என்றால்  ஒரு உதாரணத்துடன் பார்ப்போம்..

கடக லக்கினம் என்று வைத்துக் கொள்ளுங்கள் :

கேந்திர வீடுகள் :  1 ,4 ,7 ,10  ===  கடகத்திற்கு என்னென்ன வீடுகள்  கேந்திரமாகிறது  ?

கடகம், துலாம், மகரம் , மேஷம் .... கரெக்டா ...?

சந்திரன், சுக்கிரன், சனி , செவ்வாய் - இந்த வீடுகளுக்கு அதிபதிகள். சனியும் , செவ்வாயும் -  கேந்திரத்தில் நிற்பது நல்லது.

ஆனால், வளர்பிறை , சந்திரனோ, இல்லை 4 ஆம் வீட்டுக்கு அதிபதியாக வரும் சுக்கிரனோ  - தனியாக கேந்திரத்தில் நிற்க அவரால்  , முழுவதும்  பலன்கள்  இல்லை. இதைத்தான், கேந்திராதிபத்திய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகிறது..