ஜோதிட சூட்சுமங்கள் : பஞ்சாங்கம் (ஜோதிட பாடம் : 012 )

*எந்த மாசத்தில் பூர்ணிமைஅமாவாஸ்யை இல்லையோ அந்த மாஸத்துக்கு விஷமாசம் என்று பெயர்.
எந்த மாசத்தில் இரண்டு பூர்ணிமையோஇரண்டு அமாவாஸ்யையோ வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.
விஷ மாசத்திலும்மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.
ஆனால் சித்திரைவைகாசிமாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.
===========================================================
அயனங்கள்
ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூரியன்  மகர ராசியில் பிரவேசிக்கும்போது உத்தராயனம் தொடங்குகிறது. கடக ராசியில் பிரவேசிக்கும் போது தக்ஷிணாயனம் தொடங்குகிறது.
 
தைமாதம் தொடங்கி ஆனி முடிய  6 மாதங்கள் உத்தராயன காலமாகும். இக்காலகட்டத்தில் எல்லா நல்ல காரியங்களும் செய்யலாம். கும்பாபிஷேகம்க்ரஹப்பிரவேசம் போன்றவை இக்காலகட்டத்தில் நிகழ்வது உத்தமம்.
ஆடி மாதம் தொடங்கி மார்கழி ஈறாக 6 மாதங்கள் தக்ஷிணாயனம் ஆகும். இக்காலகட்டத்தில் நல்ல காரியங்களைத் தொடங்குவதை தவிர்க்க முடியுமானால் தவிர்ப்பது நல்லது.
 =========================================================
ருதுக்கள் - 6
ஒரு வருடம் 6 ருதுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
சித்திரைவைகாசி - வஸந்த ருது
ஆனிஆடி, - க்ரீஷ்ம ருது
ஆவணிபுரட்டாசி - வர்ஷ ருது
ஐப்பசிகார்த்திகை - சரத் ருது
மார்கழிதை - ஹேமந்த ருது
மாசிபங்குனி - சிசிர ருது

கிழமைகள் - 7
ஒரு நாள் என்பது 60 நாழிகைகள் கொண்டது. ஸூர்ய உதயத்திலிருந்து மறுநாள் ஸூர்யோதயம் வரை ஒரு நாளாகும்.
சாயா க்ரஹங்கள் இரண்டு நீங்கலாக மீதமுள்ள ஏழு க்ரஹங்களுக்குரியதாக ஏழு நாட்கள் கொண்ட கால அளவு ஒரு வாரம் என்று தமிழில் அறியப்படுகிறது.
ஒரு நாளைக்குரிய பெயராக வாஸரம் என்ற சொல் ஸங்கல்பத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நடைமுறைப் பெயர் ஸங்கல்பத்தில் கூற வேண்டியது

ஞாயிறு - பானு வாஸரம்
திங்கள் - இந்து வாஸரம்
செவ்வாய் - பௌம வாஸரம்
புதன் - ஸௌம்ய வாஸரம்
வியாழன் - குரு வாஸரம்
வெள்ளி - ப்ருகு வாஸரம்
சனி - ஸ்திர வாஸரம்
=============================================================

ருதுக்கள் , நாட்கள் எல்லாம் ஒரு பெரிய விஷயமானு கேட்கலாம் . நீங்க ஒரு ஜாதகம் பார்க்கிறீங்க.. அதுலே ஜனனம் - ப்ருகு வாஸரம் , னு போட்டிருந்தா , முழிக்க கூடாது இல்லையா?
=======================================================
இராகு காலம் :

கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 - 06.00
திங்கள் = 7.30 - 9.00
செவ்வாய் = 03.00 - 04.30
புதன் = 12.00 - 01.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 10.30 - 12.00
சனி = 09.00 - 10.30
=======================
"சார், ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்துதான் - ராகு காலம் தெரிஞ்சுக்கனுமா? ஈசியா எப்படி ஞாபகம் வைச்சுக்கிறது?"
உங்களுக்கு சொல்லலைனா எப்படி? 
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. ..... ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து ---- அந்த கிழமை -- வரிசைலே ஒரு ஆர்டரா வரும்.  ......  

திருவிழா ந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?

புரிஞ்சுக்க முடியுதா ? 
===================================================== 
 நம்ம வாசகர்கள் கிட்டே திரும்ப , திரும்ப சொல்ற விஷயம் இதுதான். உங்களுக்கு வர்ற கஷ்டங்கள் மறைஞ்சு , நீங்க ஒரு நல்ல நிலைக்கு வரணும்னு விரும்பினால் - ராகு கால நேரத்தில் , அம்மன் வழிபாடு செய்யுங்க. லலிதா சகஸ்ரநாமம், அல்லது மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம் சொல்லுங்க. சொந்த தொழில், வியாபாரம் பண்றவங்க தினம் கூட பண்ணலாம். முழுசா  ஒண்ணரை மணி நேரம் முடியாட்டாக் கூட , கடைசி அரை மணி நேரம் பண்ணுங்க.. உங்க வீடு, அலுவலகம்  - இப்படி உங்களுக்கு தோதான இடங்களிலே பண்ணலாம் .  அம்மன் படத்திற்கு மாலை போட்டு, தீபம் ஏற்றி பண்ணுங்க.. 
 நீங்க இருக்கும் இடத்து கிட்டே , இருக்கிற அம்மன் ஆலயம் நீங்க போய் வழிபட முடிஞ்சா  இன்னும் நல்லது.. அந்த ஆலயம் ஒரு 200 / 300 வருடம் ௦௦ பழமையான ஆலயமா  இருந்தால் ரொம்ப விசேஷம்.. 


சொந்த தொழில் இல்லாதவங்க தினம் கோவிலுக்கு போக முடியாது . நீங்க , ஞாயித்துக் கிழமை சாயங்காலம் , மிஸ் பண்ணாமல் செய்யுங்க. மற்ற நாட்களில் உங்க வீட்டுலே இருக்கிறவங்க , போக முடிஞ்சா போய்ட்டு வரட்டும்.
 உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா  முதல் ஆளா , துடிக்கிறது உங்க அம்மா தான்.. அப்பா , நீங்க ரொம்ப , ரொம்ப கஷ்டப்பட்ட பிறகு தான் , நீங்க கெஞ்சுனா தான், உங்களுக்கு உதவி செய்வார். இல்லையா? அம்மா, நீங்க கேட்கிறது, அவங்களாலே கொடுக்க முடிஞ்சா , உடனே கொடுத்திடுவாங்க இல்ல? உங்க விதிப்பயன்படி, உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் உடனடியா கிடைக்க , ராகு கால அம்மன் வழிபாடு - ரொம்ப சுலபமான முறை.
 நான் கோவிலுக்கு போய் சாமி கும்பிடுறேன்லேன்னு, பெத்த தாயை  நீங்க கவனிக்காம போட்டால்... அந்த லோக மாதா கூட மனசு கல்லாகிடுவா.. அதையும் ஞாபகம் வைச்சுக்கோங்க பாஸூ..!!
 ===================================================
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 - 01.30
திங்கள் : 10.30 - 12.00
செவ்வாய் : 09.00 - 10.30
புதன் : 07.30 - 09.00
வியாழன் : 06.00 - 07.30
வெள்ளி : 03.00 - 04.30
சனி : 01.30 - 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 - 07.30
திங்கள் : 03.00 - 04.30
செவ்வாய் : 1.30 - 03.00
புதன் : 12.00 - 01.30
வியாழன் : 10.30 - 12.00
வெள்ளி : 09.00 - 10.30
சனி : 07.30 - 09.00
இராகு காலம்எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 - 04.30
திங்கள் = 01.30 - 03.00
செவ்வாய் = 12.00 - 01.30
புதன் = 10.30 - 12.00
வியாழன் = 09.00 - 10.30
வெள்ளி = 07.30 - 09.00
சனி = 06.00 - 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 - 10.30
திங்கள் = 07.30 - 09.00
செவ்வாய் = 06.00 - 07.30
புதன் = 03.00 - 04.30
வியாழன் = 01.30 - 03.00
வெள்ளி = 12.00 - 01.30
சனி = 10.30 - 12.00