விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்.

HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப் மூலம் லேண்ட்லைனுக்கு அழைப்பு விடுக்கலாம்.


images (3)
whats-appமீபத்தில் பல  பில்லியன் பயனர்களை கைவசம் கொண்டிருந்த வாட்ஸ் ஆப்பில் ஒரு புது அம்சம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. அதாவது இதுவரை வாட்ஸ் அப்பில் போனுக்கும் போனுக்கும் மட்டுமே பரிமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இனி லேண்ட்லைன் எண்ணிற்கும் பரிமாற்றம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 4ஜி நெட்ஒர்க் வசதி கொண்ட ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வசதியை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. தனியார் மற்றும் பி.எஸ்.என்.எல் போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் டெலிபோன்களில் இந்த வசதியை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்பதால் ‘டிராய்’ நிறுவனமும்  இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை.

google_ allo_duo_screenshotகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செயலியை  வெளியிட்டுள்ளது.    இதில்  Allo என்பது  ஒரு குறுந்தகவல் செயலியாகும். மற்றும் Duo என்பது ஒரு  மிக குறைவான நெட்வொர்க் தளத்திலும்  செயல்படக்கூடிய  வீடியோ காலிங் செயலி ஆகும் .  இதற்கு முன் இது போன்ற குறுந்தகவல் செயலிகள் மற்றும் வீடியோ காலிங் செயலிகள் என  பல இருந்தாலும் இவை அதிலிருந்து சற்றே வித்தியாசமான நூதன அம்சங்கள் சிலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளன.  Allo மற்றும் Duo  செயலியால் பேஸ்புக் மெசெஞ்சர் ,  ஸ்கைப்,  வைபர் மற்றும்  IMO , மற்றும் பல போன்ற பயன்பாடுகள் மீது  ஒரு போட்டியை ஏற்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Allo: Allo அடிப்படையில் ஒரு சாதரணமான குறுந்தகவல் செயலி  ஆகும்.  இவை ஒருவருக்கு வரும் பதிலுக்கு ஏற்றவாறு செயற்கை நுண்ணறிவினை பயன்படுத்தி   ஸ்மார்ட் பதில்களை பரிந்துரை  செய்கிறது.   மேலும் குறுந்தகவல்களின் அளவுகளையும்  நமக்கு பிடித்தாற் போல் மாற்றிக் கொள்ளலாம். மேலும் புகைப்படங்களின் மேல் எழுதிக் கொள்ளும் வாய்ப்பும் தரப்படுகிறது.  மேலும் முக்கியமான நிகழ்வுகள், உணவகங்கள், பயணங்கள் போன்றவற்றினை குறுந்தகவல் செயலியினை  விட்டு வெளியேறாமலே “Search” செய்து கொள்ளலாம்.

Duo: இது ஸ்கைப், வைபர் போன்றவற்றைப் போன்றே   ஒரு வீடியோ காலிங்  செயலியே . ஆனால் வீடியோ காலிங் சேவையில் இதுவரை இல்லாததொரு ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுள்ளது.  அது என்னவென்றால்  வீடியோ காலிங் செய்கையில் எதிர் முனையில் அழைப்பவரின் வீடியோக்கள் முன்னோட்டத்துடன்  அடுத்த முனையில் இருப்பவருக்கு காட்டப்படும்.  இதனால் பாதுகாப்பு கருதி வீடியோ காலிங் செயலியை பயன்படுத்துபவர்களின்  எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த இரு செயலிகளும்  கோடை முடியும் முன் வெளியிடப்படும் என கூகுள் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த உணவுகள் ஏன் இந்த நாடுகளில் தடை செய்யப்பட்டன என்று உங்களுக்கு தெரியுமா?

நாம் விரும்பி உண்ணும், பருகும் சிலபல உணவுகள் உலகின் பல நாடுகளில் ஆரோக்கிய நலன் குறித்து தடைசெய்யப்பட்ட பொருள் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! முக்கியமாக சமோசா, கெட்சப், சூயிங்கம், பாதாம், ஜெல்லி ஸ்வீட்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. பெரும்பாலும் இந்த உணவு பண்டங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது என்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இனிமேல், எந்தெந்த நாடுகளில் எந்தெந்த உணவுகள் தடை செய்யப்பட்டுள்ளன என பார்ப்போம்...

சமோசா - சோமாலியா இந்தியாவில் மிக சாதாரணமாக கருதப்படும் சமோசா, சோமாலியாவில் தடைசெய்யப்பட்ட உணவாகும். முக்கோண வடிவம் கிறிஸ்துவ மதத்தை குடிப்பது போன்று இருப்பதாலும், இஸ்லாம் மதத்திற்கு இது இணக்கமற்றதாக கருதப்படுவதாலும், சமோசா தடைசெய்யப்பட்டுள்ளது.

கெட்சப் - பிரான்ஸ் பிரான்ஸ் நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் கெட்சப் தடைசெய்யப்பட்ட பொருளாகும். இது குழந்தைகள் மத்தியில் ஓர் அடிக்ஷனாக இருக்கிறது. அனைத்திற்கும் இதை சேர்த்துக் கொள்கின்றனர். இதை கலாச்சார அபாயமாக கருதி தடை செய்துள்ளனர்.

கிண்டர் எக் - அமெரிக்கா அமெரிக்காவில் கிண்டர் எக் தடைசெய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விரும்பி உண்ணும் பொருளாக திகழும் இதில் பொம்மைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்த உண்ணக் கூடாத பொருள் உள்ளே இருப்பதால் தான் தடை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தவறுதலாக பிளாஸ்டிக் பொருளை உண்டுவிடக் கூடாது என்பதற்காக அமேரிக்கா இதை தடை செய்துள்ளது.

சூயிங்கம் - சிங்கப்பூர் கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து சூயிங்கம் மெல்வது சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்டுள்ளது. பரிந்துரைக்கப்படாமல் யாரும் சூயிங்கம் மெல்லக் கூடாது. மீறினால், 500 டாலர் அபராதம். சிங்கப்பூரின் அடையலாமே சுத்தம் தான், அதை இது கெடுக்கிறது என்பதற்காக தான் இந்த தடை.

பாங்கு - உலகின் ஏனைய இடங்களில் கஞ்சா கலந்து விற்கப்படும் பாங்கு இந்தியா மட்டுமின்றி, உலகின் பல இடங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

பாதாம் - கலிபோர்னியா கலிபோர்னியாவில் பச்சை பாதாம் விற்க தடை. சால்மோனெல்லா (salmonella) எனும் பாக்டீரியா பாதிப்பு உண்டாக இது காரணமாக இருப்பதாலும், இதனால், அதிக காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுகிறது என்பதாலும் பச்சை பாதாம் விற்பதை தடை செய்துள்னர்.

பி.வி.ஓ (BVO) - ஐரோப்பியா பெரும்பாலான காற்றோட்டமுள்ள சிட்ரஸ் ட்ரிங்க்ஸ்களான மவுண்டன் டியூ போன்றவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருளான பி.வி.ஓ நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருளாகும். பி.வி.ஓ அதிகளவில் சேர்வது, ஞாபக சக்தி இழப்பு, மயக்கம், கவன குறைபாடு போன்ற பக்கவிளைவுகள் உண்டாக்க கூடியது ஆகும்.

பச்சை பால் - அமெரிக்கா பச்சை பால் அமெரிக்காவின் 22 மாகணங்களில் தடை செய்ப்பட்டுள்ளது. ஆனால், இது ஐரோப்பிய, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற கண்டங்களில் சட்டப்பூர்வமாக விற்கப்படும் பொருளாகும்.

ஜெல்லி ஸ்வீட்ஸ் - ஐரோப்பிய ஜெல்லி ஸ்வீட்ஸ் ஐரோப்பிய கண்டங்களில் தடை செய்யப்பட்ட பொருளாகும். இவற்றில் சேர்க்கப்படும் மூலப்பொருள், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.

இலவசமாக போன் கால் செய்வது எப்படி ? அறிமுகமாகியுள்ளது வாட்சப் ஐ மிஞ்சும் புதிய ஆப்.

Hello Nano App free call indiaவாடிக்கையாளர்களை கவர்வற்கு இலவச கால் வசதியை வழங்கும் பல்வேறு free call india android app தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வரிசையில் சமீபத்தில் வெளியான nano free call app மிகவும் பிரபல்யம் அடைந்துள்ளது. இந்தியாவில் உள்ளவர்களுக்கு இதில் இலவசமாக போன் கால் செய்து கொள்ளலாம்.
nano-free-call-message-smsசிங்கபூரை சேர்ந்த telecom நிறுவனம் இந்த இலவச போன் கால் வசதி வழங்கும் மொபைல் ஆப் ஐ வெளியிட்டுள்ளது. மற்ற free call app போன்று அல்லாமல் 2G connection னிலும் நன்கு வேலை செய்யும் வன்னம் இந்த android app வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன் முக்கிய சிறப்பு அம்சமாகும்.
10 நிமிடம் பேசுவதற்கு வெறும் 105kb data மட்டுமே இந்த app ல் செலவாகும். Whatsapp Facebook Skype போன்ற மற்ற app களி் 800+ KB data வரை செலவாகும். இதனால் கிட்ட தட்ட 80% சதவிகித data நமக்கு மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் இலவசமாக mobile மற்றும் landline களுக்கு phone call செய்வதற்கு இலவச call credit ஐ nano app வழங்குகின்றது. வாட்சப் போன்று message மற்றும் group வசதிகளும் இதில் உள்ளது.

இலவச போன் கால் செய்வது எப்படி

nano app to nano app call & message முற்றிலும் இலவசம். தினமும் வழங்கப்படும் credit அல்லாமல் கூடுதலாக credit களை தாங்கள் earn செய்து கொள்வதற்கு 3 விதமான வழிமுறைகளை nano app தருகின்றது.
நண்பருக்கு அறிமுகப்படுத்ததல்
facebook ல் பங்குபெறுதல்
விளம்பரங்கள்
இதில் இதன் சிறப்பு அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளது. Download Nano app

SpiceJet ன் அதிரடி ஆஃபர்: ரூ 444 க்கு விமான டிக்கட்.

SpiceJet Monsoon Bonanza sale offerபல நேரங்களில் வானத்தை அன்னார்ந்து பார்த்து நாம் எப்பொழுது விமானத்தில் பரக்கப்போகின்றோம் என பலரும் ஏங்கியிருப்பார்கள். அவர்களின் ஆசையை குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ள SpiceJet நிறுவனம் ஏர் டிக்கட் ஆஃபர் ஆக”SpiceJet Monsoon Bonanza sale”என்ற பெயரில் அதிரடி ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.
ஜம்மு <> ஸ்ரீநகர், அஹமதாபாத் <> மும்பை, மும்பை <> கோவா, டெல்லி <> டெஹராடூன், டெல்லி <> அம்ரிட்சர் ஆகிய வழித்தடங்களுக்கு செல்ல அடிப்படை கட்டணம் இச்சலுகையில் வெறும் Rs 444/- தான்.  ஜுன் 26 ஆம் தேதி வரை இந்த ஆஃபர் அமலில் இருக்கும் என SpiceJet நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானத்தில் பறக்க ஆசைப்படுபவர்கள் இப்பொழுது டிக்கட்டை புக் செய்து http://www.spicejet.com/ ஆஃபரை பயன்படுத்தி மகிழுங்கள்.

விசா இன்றி பயணம் செய்யும் நாடுகளின் பட்டியல்: இந்த நாடுகளுக்கு செல்ல விசா தேவை இல்லை.

பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அந்த நாட்டின் வீசா தேவை. ஆனால் இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்
இந்திய சிடிசன் தனது பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதேவேளையில், 29 நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல் – Visa on arrival’ என்ற வருகையின் போது விசா சேவையைப் பயன்படுத்தலாம்.
பாஸ்போர்ட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி (Passport Index official website) அமெரிக்கா அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர், 147 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை உள்ளது.

விசா இன்றி பயணம் செய்யும் 58 நாடுகளின் பட்டியல் இதோ:

  1. Bhutan
  2. Hong Kong
  3. South Korea (Jeju)
  4. Macau
  5. Nepal
  6. Antarctica
  7. Seychelles
  8. FYRO Macedonia
  9. Svalbard
  10. Dominica
  11. Grenada
  12. Haiti
  13. Jamaica
  14. Montserrat
  15. St. Kitts & Nevis
  16. St. Vincent & Grenadines
  17. Trinidad & Tobago
  18. Turks & Caicos Islands
  19. British Virgin Islands
  20. El Salvador
  21. Ecuador
  22. Cook Islands
  23. Fiji
  24. Micronesia
  25. Niue
  26. Samoa
  27. Vanuatu
  28. Cambodia
  29. Indonesia
  30. Laos
  31. Thailand
  32. Timor Leste
  33. Iraq (Basra)
  34. Jordan
  35. Comoros Is.
  36. Maldives
  37. Mauritius
  38. Cape Verde
  39. Djibouti
  40. Ethiopia
  41. Gambia
  42. Guinea-Bissau
  43. Kenya
  44. Madagascar
  45. Mozambique
  46. Sao Tome & Principe
  47. Tanzania
  48. Togo
  49. Uganda
  50. Georgia
  51. Tajikistan
  52. St. Lucia
  53. Nicaragua
  54. Bolivia
  55. Guyana
  56. Nauru
  57. Palau
  58. Tuvalu

வருகையின் போது விசா (Visa On Arrival)

  1. Bolivia
  2. Burundi
  3. Cambodia
  4. Cape Verde
  5. Comoros
  6. Djibouti
  7. Ethiopia
  8. Guinea-Bissau
  9. Guyana
  10. Indonesia
  11. Jordan
  12. Kenya
  13. Laos
  14. Madagascar
  15. Maldives
  16. Nauru
  17. Palau
  18. Saint Lucia
  19. Samoa
  20. Seychelles
  21. Somalia
  22. Tanzania
  23. Thailand
  24. Timor-Leste
  25. Togo
  26. Tuvalu
  27. Uganda
  28. Somaliland
  29. Niue

இந்த ஆவணங்களை சமீபிர்த்தால் போலிஸ் விசாரனை இல்லாமல் பாஸ்போர்ட் கிடைக்கும் – புதிய சட்டம் அமல்.

no police verification for passportபாஸ்போட் வாங்கிய அனைவரும் போலிசிற்கும் லட்சம் கொடுக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். ஒரு பாஸ்போட்டிற்கு இவ்வளவு என விலை நிர்ணயித்து போலிசார் பணம் பரிப்பார்கள். இனி அது நடக்காது. இது போலிசாருக்கு வருத்தம் என்றாலும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான விசயம் தான்.
ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான்கார்டு, வாக்களார் அடையாள அட்டை, மூத்த குடிமக்களுக்கான அட்டை ஆகிவயற்றில் ஏதாவது ஒன்றை விண்ணப்பிக்கும் போது கொடுக்க வேண்டும்.
மேலும் மின்சார கட்டணம் செலுத்தும் ரசீது, ரேஷன் கார்டு, வீட்டு வாடகை ரசீது ஆகியவற்றில் ஒன்றையும் விண்ணப்பிக்கும் போது வழங்குவதோடு  ”என் மீது எந்தவிதமான வழக்கும் இல்லை, நான் வெளிநாடு செல்வதால் எந்தவிதமான சிக்கலும் வராது என விண்ணப்பதாரர் படிவம் ‘ஐ’ யில் கையெழுத்துப் போட்டு கொடுத்துவிட்டால் போலிஸ் விசாரனை இல்லாமல் பாஸ்போட் வீடு வந்து சேரும்.
இது முதல் முறையாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.