ஜோதிட அடிப்படை பாடங்கள் : ( பாடம் : 03 )

இது வரைக்கும், நாம - 12 ராசிகளையும், அது எந்த கிரகத்தோட வீடு, எந்த கிரகம் எந்த வீட்டுலே -  உச்ச , நீசம், பகை , நட்பு - எல்லாம் பார்த்தோம்.

இன்னைக்கு நாம பார்க்கப் போறது - நட்சத்திரங்களை., நட்சத்திர அதிபதிகளை.

நம்மோட முதல் பாடத்திலே , 27 நட்சத்திரங்களை - பார்த்தோம். ஞாபகம் இருக்கிறதா? 
அதை கீழே கொடுத்த படி, 9 வரிசைலே எழுதி இருந்தோம்..



இதிலே - முதல் வரிசையிலே - மூன்று நட்சத்திரங்கள் இருக்கு இல்லையா? - இந்த நட்சத்திரங்களுக்கு - அதிபதி - கேது. இதைபோலே எல்லா நட்சத்திரங்களுக்கும் யார் யார் நட்சத்திர நாயகர்கள் னு பார்ப்போம்.

கேது                  - அஸ்வினி, மகம், மூலம்
சுக்கிரன்          - பரணி, பூரம், பூராடம்,
சூரியன்            - கார்த்திகை , உத்திரம், உத்திராடம்.
சந்திரன்           - ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்,
செவ்வாய்       - மிருக சீரிஷம் , சித்திரை, அவிட்டம்
ராகு                    - திருவாதிரை, சுவாதி , சதயம்
குரு                     - புனர்பூசம், விசாகம் , பூரட்டாதி
சனி                     - பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி
புதன்                  - ஆயில்யம் , கேட்டை, ரேவதி

இது எதுக்காக இந்த வரிசைனு  கேளுங்க ..? 

நீங்க எந்த நட்சத்திரத்திலே பிறந்தாலும் - அந்த நட்சத்திர அதிபரோட தசை தான் - உங்களுக்கு முதல்லெ வரும்... அதன்பிறகு, அடுத்த அதிபர், .. இப்படி  வரிசையா வந்து , திரும்ப முதல் தசை கேது, அப்புறம் சுக்கிரன், .. இப்படியே போகும்.. 

நீங்க பிறந்த நட்சத்திரம் - சித்திரைனு வச்சுக்கோங்களேன் -  நீங்க , பிறந்ததும் - முதல் ல வரும் தசை - செவ்வாய் தசை. அதன் பிறகு , ராகு தசை , அப்புறம் - குரு , சனி , புதன் தசை வரும். அதுக்கு அப்புறம் - மேலே போகணும் - கேது தசை , சுக்கிரன், சூரியன்... இப்படியே வரணும்.

ஒவ்வொரு தசையும் எத்தனை வருஷம்னு பார்ப்போம்.

கேது             - 7 வருடங்கள்
சுக்கிரன்      - 20 வருடங்கள்  
சூரியன்       - 6 வருடங்கள்
சந்திரன்      - 10 வருடங்கள்
செவ்வாய்  - 7 வருடங்கள்
ராகு              - 18 வருடங்கள்
குரு              - 16 வருடங்கள்
சனி              - 19 வருடங்கள்
புதன்            - 17 வருடங்கள்


ஒரு சுற்று முடிய  - 120 வருஷங்கள் ஆகும். So , எல்லாருக்கும் , எல்லா திசையும் வருவது இல்லை. ... உதாரணத்துக்கு , ஒருத்தருக்கு ஜாதகத்திலே  சுக்கிரன் - நல்ல நிலை லெ இருக்கும் னு வைச்சுக்குவோம். ஆனா , அவர் பிறந்தது கார்த்திகை நட்சத்திரம் னு வைச்சுக்கோங்களேன். அவரு, கிட்டத்தட்ட் - நூறு வருஷம் முடிச்ச பிறகு தான், சுக்கிர தசையை பார்க்க முடியும். நல்லா இருந்தும், பிரயோஜனம் இல்லை.

மனுஷன் செஞ்ச பாவ, புண்ணியத்துக்கு ஏற்ப , சரியாய் இந்த தசை நடக்கும். ..எப்படி எல்லாம் "செக்" வைக்கிறாங்க பாருங்க... 

ஒவ்வொரு நட்சத்திரத்திற்க்கும் , நான்கு பாதங்கள் இருக்கும். இல்லையா?
உதாரணத்திற்கு பிறந்த நட்சத்திரம் = = =  திருவோணம் 3 ஆம் பாதம் னு வைச்சுக்கோங்களேன்.
அதனாலே, முதல்ல சந்திர தசை வரும் இல்லையா. மொத்த வருஷம் - 10 . கரெக்டா?
 So ,  ஒவ்வொரு பாதத்திற்கும் - 2 1 /2 வருடங்கள் வரும். so , மீதி இருப்பது, ( 3 ஆம் பாதம், 4 ஆம் பாதம் மட்டுமே ) 5 வருஷங்கள் இருக்கும். இதிலே , கர்ப்ப செல் போக கழிவு இருப்பு பார்க்கணும். அதை எப்படி பார்க்கிறது னு, நாம மெதுவா பார்க்கலாம். இப்போவே சொன்னா, ரொம்ப கஷ்டமா பீல் பண்ணுவீங்க..  ஒரு உதாரணத்திற்கு - கர்ப்ப செல் இருப்பு. 6 மாதங்கள் னு எடுத்துக்கலாம். 

அதனாலே , அவர் ஜாதகத்திலே - சந்திர தசை இருப்பு - 4 வரு , 6 மாதங்கள், 0 நாட்கள் அப்படின்னு எழுதி இருப்பாங்க.

இப்போ இன்னொரு விஷயம் ஞாபகம் வைச்சுக்கோங்க. மொத்தம் - 10 வருடம் , சந்திரா தசை வருது இல்லையா. ஒவ்வொரு கிரகத்திற்கும் - புத்தி இருப்பு மாறுபடும்.
மொத்தம் 9 கிரகம் இருக்கு. இல்லையா..

சந்திர தசை , வந்ததுனா - முதல்லே - சந்திர புத்தி வரும் (10 மாதங்கள் ) . அப்புறம் செவ்வாய் புத்தி( 7 மாதங்கள் ) , அப்புறம் ராகு புத்தி (18 மாதங்கள்) . ... மொத்தமா எல்லாம் கூட்டினா 10 வருடங்கள் வரும். 

புத்தி இருப்பு எப்படி பார்க்கணும் னு ஒரு பார்முலா இருக்கு.
 புக்தி
( B x C / A ) =  வருடங்கள்

மொத்த தசை இருப்பு : (A )  - 120 வருடங்கள் 
தசா கிரகத்தோட  மொத்த வருடங்கள் : (B) 
புத்தி பார்க்க வேண்டிய கிரகத்தோட இயல்பான தசை வருடங்கள் : (C )

சனி தசை லெ - கேது புத்தி எவ்வளவு னு பார்க்கலாம்.?  

சனி தசை மொத்தம் எவ்வளவு - 19 வருஷம்.  B = 19 ;
கேது வோட இயல்பான தசை = 7 வருஷம் ;  C = 7 


( 19 * 7 / 120 ) = 1 .108333 வருதா...? அதை அப்படியே , மாதம் நாளா மாத்திக்கோங்க.
 நீங்க இதை 360 ஆலே பெருக்கிக்கோங்க.  =  399 வருதா. 13 மாதம் ,  9 நாள் வரும்.

ஜோதிடப்படி, கணக்கு பண்ண ஈஸியா ,  1 வரு = 360 நாட்கள் ; 1 மாதம் - 30 நாட்கள்  னு எடுத்துக்கோங்க.. 

பிறக்கும் போது , எந்த தசை , எந்த புக்தி இருப்பு னு தெளிவா எழுதி இருப்பாங்க..
அந்த டீடைல் தெளிவா இருந்தாத் தான், உங்களுக்கு இப்போ நடப்பு தசை , புக்தி என்னனு  தெளிவா கண்டு பிடிக்க இயலும். .... அது கண்டு பிடிச்சாத்தான் , உங்களுக்கு என்ன பலன்கள் இப்போ ஏற்படும் னு கண்டு பிடிக்க இயலும்.....